எங்கேயோ திக்கு திசை காணாத தூரம் தான்.. மாயமான தங்கையை கண்டுபிடித்த அண்ணன்.. நெகிழ்ச்சி கதை!

செய்திகள் இந்தியா எங்கேயோ திக்கு திசை காணாத தூரம் தான்.. மாயமான தங்கையை கண்டுபிடித்த அண்ணன்.. நெகிழ்ச்சி கதை! India oi-Velmurugan P By Velmurugan P |

பெல்லாரி: மகாராஷ்டிராவில் ஒரு மத தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறார் பிரசன்னா ஜோஷி. இவர் 2016ல் காணாமல் போன தனது தங்கை குறித்து சமூக ஊடகங்களில் ஒரு பதிவைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவரை கர்நாடகா மாநிலம் பல்லாரியில் கண்டுபிடித்து மீட்டுள்ளார்

மகாராஷ்டிராவின் லாதூரியைச் சேர்ந்த பிரசன்னா ஜோஷியின் சகோதரி சுப்ரியா 2016ம் ஆண்டு காணாமல் போனார் திருமணம் தொடர்பாக சுப்ரியா தனது சகோதரருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறிய பின் பல இடங்களில் அலைந்திருக்கிறார். இதனால் பிரசன்னா பல முறை தனது சகோதரியைத் தேடியும் அவர் கிடைக்கவில்லை

ஆபரேஷன் முடிந்த அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி.. 22 வயது பெண்ணின் திடீர் மரணம்.. என்ன காரணம்?

மனநிலை சரியில்லா சுப்ரியா

மனநிலை சரியில்லா சுப்ரியா

மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று நோய் பரவ ஆரம்பித்த போது, கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்ட நிர்வாகம் சோதனை முடுக்கிவிட்டபோதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்க தொடங்கியது. சுப்ரியா வீடற்றவர் மற்றும் மனநிலை சரியில்லாதவர் என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். கோவிட் -19 சோதனைக்காக அவர்கள், சுப்ரியாவை விஜயநகர் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (விம்ஸ்) அழைத்துச் சென்றனர். அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், சாந்தி தமா அனாதை இல்ல மையத்தில் சிகிச்சையில் வைக்கப்பட்டார். அனாதை இல்லத்தில் உள்ள ஊழியர்களும் ஆலோசகர்களும் சுப்ரியாவுடன் அவரது குடும்பத்தைப் பற்றி பேச முயன்றனர்.

சமூக வலைதள பதிவு

சமூக வலைதள பதிவு

அவள் மன அதிர்ச்சியிலிருந்து அவள் முழுமையாக குணமடையவில்லை என்பதையும் அவள் நீண்ட காலத்திற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறிவிட்டதையும் அவர்கள் உணர்ந்தார்கள். இந்நிலையில் சாந்தி தமா அனாதை இல்லத்தின் மூத்த ஆலோசகர் இது பற்றி கூறுகையில் "சுப்ரியாவின் உறவினர்களின் உறவினர்கள் யார் என்பது குறித்து அறிய சமூக ஊடகங்களில் அவரைப் பற்றி வெளியிட்டோம்.

கோவிட் பரிசோதனை

கோவிட் பரிசோதனை

ஜூன் முதல் வாரத்தில், சுப்ரியாவின் சகோதரர் பிரசன்னா ஜோஷி எங்களைத் தொடர்புகொண்டு பல்லாரிக்கு வந்தார். தனிமைப்படுத்தி கொரோனா சோதனை அவருககு நடத்தப்பட்டது. கொரோனா இல்லை என்பது அவருக்கு உறுதியானது. இதையடுத்து அவரது தந்தையை சந்திக்க அனுமதித்தோம். சந்தித்தவுடன் இரு உடன்பிறப்புகளும் ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொண்டனர் .

பெல்லாரி காவல் துணை ஆணையர்

பெல்லாரி காவல் துணை ஆணையர்

இதனிடையே பெல்லாரி துணை காவல் ஆணையர் எஸ் எஸ் நகுல் கூறும் போது, சுப்ரியா மார்ச் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார். "குடும்பம் மீண்டும் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதற்கான அனைத்து நன்றிகளும் பல்லாரியில் உள்ள மருத்துவமனை மற்றும் அனாதை இல்ல ஊழியர்களுக்கே சேரும் என்று அவர் கூறினார்.

தேடினோம் உறவுகளை

தேடினோம் உறவுகளை

மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அலுவலர் ஆர்.நாகராஜ் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரியா வந்த போது, கோகர்ணா மற்றும் கோவாவில் இருந்து வந்நதாக கூறினார். அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் என்று எங்களுக்குத் தெரிந்ததும், அவளுடைய குடும்பத்தைக் கண்டுபிடிக்க சமூக ஊடகங்களில் வெளியிட முடிவு செய்து வெளியிட்டோம், "என்று அவர் விளக்கினார்.

நெகிழ்ச்சியுடன் நன்றி

நெகிழ்ச்சியுடன் நன்றி

தனது தங்கை சுப்ரியாவை மீட்டுக்கொடுத்த அனாதை இல்லம் மற்றும் பெல்லாரி மாவட்ட நிர்வாகத்திற்கு பிரசன்னா ஜோஷி, நன்றி தெரிவித்தார். "எங்கள் பெற்றோர் 2013 இல் இறந்துவிட்டார்கள். அதன் பின்னர் சுப்ரியா அதிர்ச்சி நிலையில் இருந்தார். ஒரு சிறிய பிரச்சினை தொடர்பாக அவள் என்னுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள். இப்போது நான் அவளைக் கண்டுபிடித்துவிட்டேன். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை, "என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

மேலும் karnataka செய்திகள்

 • பெங்களூர் எல்லைதான்.. கடும் கெடுபிடி.. நடந்து சென்றாலும் அடித்து விரட்டும் போலீஸ்!
 • மகாராஷ்டிராவில் தொடர்ந்து பயங்கரமாக தாக்கி வரும் கொரோனா- 24 மணிநேரத்தில் 3,752 பேருக்கு பாதிப்பு
 • கொரோனாவை கட்டுப்படுத்தி அசத்தல்.. பிற நகரங்களுக்கு வழிகாட்டி.. பெங்களூர் சாதித்தது எப்படி?
 • ஜூலை 2ல் கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு.. விழாவுக்கு அனுமதிக்காத கர்நாடக அரசு
 • சென்னை மாதிரி கர்நாடகாவில் ஊரடங்கா.. நெவர்.. பொருளாதாரத்தை மீட்பதே எங்கள் இலக்கு- எடியூரப்பா அதிரடி
 • தமிழகத்தில் இருந்து வந்தாலே அரசு முகாமில் கட்டாய தனிமை.. கர்நாடக அரசு பகீர் அறிவிப்பு.. புது ரூல்ஸ்!
 • சென்னையில் இருந்து கர்நாடகா சென்றால் முகாமில் 3 நாட்கள்- வீட்டில் 11 நாட்கள் தனிமை-எடியூரப்பா அதிரடி
 • சுகாதாரத் துறை அமைச்சரே இப்படி இருந்தால்.. கர்நாடக மக்கள் நிலைமை கஷ்டம்தான்.. தொடரும் சர்ச்சை
 • கர்நாடகா.. தேவ கவுடா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 4 பேர் ராஜ்யசபாவிற்கு போட்டியின்றி தேர்வு
 • பலநூறு பேர் கூடினார்கள்.. கொரோனாவிற்கு இடையே கர்நாடகாவில் நடந்த வினோத திருவிழா.. அதிர்ச்சி வீடியோ!
 • காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் நீர் திறப்பு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
 • 7ம் வகுப்பு வரை.. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது.. கர்நாடக அரசு அதிரடி முடிவு

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already subscribed

Your in currently Olaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » எங்கேயோ திக்கு திசை காணாத தூரம் தான்.. மாயமான தங்கையை கண்டுபிடித்த அண்ணன்.. நெகிழ்ச்சி கதை!

Top Trending Post