கராச்சி தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதானாம்.. சந்தேகமே இல்லையாம்.. சொல்றது யாருனு பாருங்க!

செய்திகள் உலகம் கராச்சி தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதானாம்.. சந்தேகமே இல்லையாம்.. சொல்றது யாருனு பாருங்க! World oi-Vishnupriya R By Vishnupriya R |

கராச்சி: கராச்சியில் பங்குச் சந்தையில் நடந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதான் என்றும் தனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள பங்குச் சந்தை அலுவலகத்திற்குள் கடந்த திங்கள்கிழமை ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியும் கையெறி குண்டு வீசியும் தாக்குதல்களை நடத்தினர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொரோனா போல பெருந்தொற்றாக மாற வாய்ப்புள்ள புதிய வைரஸ்.. சீன பன்றிப் பண்ணைகளில் கண்டுபிடிப்பு.. ஷாக்

தாக்குதல்

தாக்குதல்

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 5 பாதுகாப்பு காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஏற்கெனவே பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த நிலையில் கராச்சி தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறார்.

நிலையற்றதன்மை

நிலையற்றதன்மை

இதுகுறித்து அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில் மும்பை தாக்குதலில் என்ன நடந்ததோ அது இங்கும் நடக்க வேண்டும் என அவர்கள் (இந்தியா) நினைக்கிறார்கள். நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

எனவே இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த தாக்குதல் நடைபெறும் என்பது எங்களது அமைச்சரவைக்கு கடந்த 2 மாதங்களாக தெரியும். நான் என் அமைச்சர்களுக்கு அறிவித்தேன். புலனாய்வு அமைப்புகள் உச்சகட்ட பாதுகாப்பில் இருந்தனர் என்றார் இம்ரான்கான்.

பயங்கரம்

பயங்கரம்

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில் பாகிஸ்தான் போல் இல்லை. கராச்சி உள்பட உலகில் பயங்கரவாதம் எங்கு நடந்தாலும் அதை கண்டிப்பதில் இந்தியாவுக்கு தயக்கம் ஏதும் இல்லை. உலக பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை தியாகி என்றவர்தானே இம்ரான் கான் என்று தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான், கூச்சம் நாச்சம் இல்லாமல் இந்தியா மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி நீலிக் கண்ணீர் வடிப்பது தீவிரவாதத்தை காட்டிலும் பயங்கரமால்ல இருக்கு!

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

மேலும் imran khan செய்திகள்

 • பின்லேடன் ஒரு தியாகி.. அமெரிக்காதான் அத்துமீறியது.. பாக். பிரதமர் இம்ரான் பரபர கருத்து.. திருப்பம்!
 • என் கூட "உறவு" வச்சுக்க ஆசைப்பட்டார் இம்ரான் கான்.. கிலானி என்னை தடவினார்.. குண்டை போட்ட சிந்தியா!
 • அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாகும் இந்தியா.. பாக். பிரதமர் இம்ரான் கானின் அகங்கார பேச்சு
 • கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பாக். பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல்!
 • இம்ரான் கான் மனைவிக்கு கொரோனாவெல்லாம் இல்லை.. தீயாய் பரவிய வதந்தி.. ஆதாரத்துடன் வெளியான உண்மை!
 • காஷ்மீரை போல்.. சீனாவின் உய்குர் முஸ்லிம்களை பற்றி கேட்காதது ஏன்.. இம்ரான் கான் ஷாக் பதில்
 • பாகிஸ்தான் மீண்டும் அந்த தப்பை மட்டும் செய்யாது.. இம்ரான் கான் திட்டவட்டம்
 • சொந்த நாட்டை பாருங்கள்.. இந்திய முஸ்லீம்கள் குறித்து இம்ரான் கான் கவலைப்பட வேண்டாம்.. ஓவைசி
 • இந்து தேசியவாதத்தை அணிதிரட்ட பாகிஸ்தானுடன் இந்திய அரசு போர் பதற்றம்.. இம்ரான் கான் திடீர் ட்வீட்
 • குடியுரிமை சட்டத்தை பாதுகாப்பது ஏன்? ஜநாவில் விளக்கிய இந்தியா.. இம்ரான்கான் கருத்துக்கு கடும் பதிலடி
 • முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவாங்க.. அணு ஆயுத போர் வரும்.. இம்ரான் கான் வார்னிங்
 • இந்தியா நிறைவேற்றியுள்ள குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு இம்ரான் கான் கடும் கண்டனம்

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already subscribed

Your in currently Olaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » கராச்சி தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதானாம்.. சந்தேகமே இல்லையாம்.. சொல்றது யாருனு பாருங்க!

Top Trending Post