
செய்திகள் தமிழகம் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் கொரோனாவால் பலி.. மு.க ஸ்டாலின் இரங்கல்! Tamilnadu oi-Shyamsundar I By Shyamsundar I |
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுகுமார் கொரோனா காரணமாக பலியானதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் 4 டாக்டர்கள், 5 செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுகுமார் இன்று கொரோனா பலியானார். அவரின் இறப்பு செங்கல்பட்டிலும் தமிழகத்தில் இந்த இறப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சுகுமார் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் போஸ்டில், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் திரு. சுகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகவும் வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நகர்ப்புறங்களில் வீசிய கொரோனா அபாய அலை… கிராமப்புறங்களில் வீசத் தொடங்கிவிட்டது -மு.க.ஸ்டாலின்
சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் மரணம்- கொரோனா சிகிச்சையில் முன்கள வீரர்களாக இருப்போரைப் பாதுகாப்பதில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து காட்டி வரும் அலட்சியத்தின் அடையாளமாகும்.
அரசின் இதுபோன்ற தோல்விகள், கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர் ஆகியோருக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி, நோய்த் தடுப்பில் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஆகவே முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாத்திட,இனியொரு மரணம் நிகழ்ந்து விடாமல் தடுத்திட, உரிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
அரசுத் தலைமை மருத்துவர் திரு. சுகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!
மேலும் டெல்லி செய்திகள்
-
கொரோனா பாதிப்பு.. நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
-
எச்சரித்தது போலவே நடக்கிறது.. டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.5 ஆக பதிவு
-
எல்லை மோதலில் காயமடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து நலம் விசாரித்த மோடி.. நாடு நினைவு கொள்ளும் என உரை
-
அதிர்ச்சி.. இன்று ஒரே நாளில் 4329 பேருக்கு கொரோனா.. 64 பேர் பலி.. மொத்த பாதிப்பு 102721ஐ தொட்டது!
-
லடாக் மக்களா.. மோடியா.. யாரோ ஒருவர் பொய் சொல்றாங்க.. வீடியோவை காட்டி ராகுல் காந்தி கேள்வி
-
ஆகஸ்ட் 15ல் கொரோனா தடுப்பூசி வெளியாக வாய்ப்பே இல்லை.. ஐசிஎம்ஆர் அறிவிப்பு சாத்தியமற்றது- நிபுணர்கள்
-
இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு
-
லடாக்கில் மோடி.. "மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது.." சீனா திடீர் அறிக்கை
-
"மறமானம் மாண்ட.." லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை குறிப்பிட்டு உரையாற்றிய மோடி
-
PM Modi Ladakh visit: லடாக்குக்கு விஜயம் செய்த மோடி.. மக்கள் ஆச்சரியம்.. குவியும் பாராட்டு
-
அமைதியை விரும்புகிறோம்.. அத்துமீறினால் விட மாட்டோம்.. ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி எழுச்சி உரை
-
சீனாவுக்கு மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகளுக்கும் மோடி கொடுத்த மெசேஜ்.. லடாக் விசிட் பின்னணியில் 5 காரணம்
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already subscribed