டமால் என்று எதிரொலித்த சத்தம்.. புல்வாமா சிஆர்பிஎப் முகாம் அருகே தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்

செய்திகள் இந்தியா டமால் என்று எதிரொலித்த சத்தம்.. புல்வாமா சிஆர்பிஎப் முகாம் அருகே தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் India oi-Veerakumar By Veerakumar |

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் திங்கள்கிழமை இரவு தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசினர், ஆனால், அதிருஷ்டவசமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிஆர்பிஎப் முகாமுக்கு அருகே கை எறிகுண்டு வெடித்தது என்று அவர்கள் தெரிவித்தனர். இது பயங்கர சத்தமாக எதிரொலித்தது. முதலில் ஏன் இப்படி ஒரு சத்தம் வந்தது என புரியவில்லை. ஆனால் பின்னர்தான் இது தீவிரவாதிகளின் செயல் என தெரியவந்தது.

Militants hurl grenade at CRPF camp in J-K Pulwama district

"இரவு 8.30 மணியளவில் டிரால் பகுதியில் படகுண்டில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசினர்" என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நமது ராணுவ வீரர்களை கொன்ற சீனா, நரேந்திர மோடியை புகழ்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் சத்தம் வந்த திசை நோக்கி, சில ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் இழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

புல்வாமாவில், 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த வாகனத்தின்மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

மேலும் pulwama செய்திகள்

 • கார் நிறைய வெடிகுண்டு.. சரமாரி சூட்டிங்.. புல்வாமாவில் பெரும் நாசவேலை முறியடிப்பு- பரபர வீடியோ
 • மாண்டு கிடந்த கணவர்.. முத்தமிட்டு ஐலவ்யூ சொல்லி அழுத நிகிதா.. இதோ ராணுவ பணிக்கு கிளம்பி விட்டார்!
 • புல்வாமா தாக்குதல்.. 40 வீரர்கள் பலி.. உளவுத் துறையின் தோல்வியே காரணம்.. சிஆர்பிஎஃப் அறிக்கை!
 • இன்னொரு புல்வாமா தாக்குதல் நடக்கும்.. பாக் .பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் குறித்து ஆவேச பேச்சு
 • புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்… காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு
 • ராணுவம் அதிரடி.. புல்வாமா தாக்குதலில் தொடர்புள்ள முக்கிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
 • புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்
 • மோடியை குறிவைத்து தாக்குதல்.. அசார் அமைச்சர் இதில் பலியாவார்.. மிரட்டல் நபரை கைது செய்த போலீஸ்
 • மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடப்பதாக வீடியோ.. பதற வைத்த போலி போலீஸ் கமிஷ்னர்
 • புல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.! இந்தியாவை எச்சரித்த பாக்.,
 • 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமித்ஷா சொல்றாரே.. மோடி ஏன் கப்சிப்னு இருக்கார்.. மாயாவதி கேள்வி
 • இப்படி பேசலாமா நவ்ஜோத் சிங் சித்து? பஞ்சாப்பில் போராட்டங்கள்.. சட்டசபை வளாகத்தில் உருவப்படம் எரிப்பு

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already subscribed

Your in currently Olaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » டமால் என்று எதிரொலித்த சத்தம்.. புல்வாமா சிஆர்பிஎப் முகாம் அருகே தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்

Top Trending Post