புல்லாங்குழல் ஊதினாலும் சுதர்சன சக்கரமும் எங்கள் கையில் இருக்கிறது – மோடி #ModiStrongestPmEver

செய்திகள் இந்தியா புல்லாங்குழல் ஊதினாலும் சுதர்சன சக்கரமும் எங்கள் கையில் இருக்கிறது – மோடி #ModiStrongestPmEver India oi-C Jeyalakshmi By C Jeyalakshmi |

லடாக்: நாம் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர்கள்தான் அதே நேரத்தில் எந்த நேரத்தில் சுதர்சன சக்கரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் எங்களுக்குத் தெரியும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் களத்தில் எதிரிகளை சந்திக்க தயங்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

சீனாவின் மாஸ்டர்பிளான்.. உலக நாடுகளை இணைக்கும் "தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்''.. முழு பின்னணி!

இந்திய, சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்திற்குமிடையே, மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் திடீரென இன்று லே பகுதிக்கு விரைந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

லடாக் பயணம் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென இன்று காலையில் நிகழ்ந்தது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில் முன்னறிவிப்பின்றி மோடி அங்கு சென்றுள்ளார்.

"மறமானம் மாண்ட.." லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை குறிப்பிட்டு உரையாற்றிய மோடி

வீரர்களுக்கு அஞ்சலி

வீரர்களுக்கு அஞ்சலி

ராணுவத்தினர் மத்தியில் வீர உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய வீரர்களின் வீரத்தையும் தீரத்தையும் பாரட்டினார். இந்திய நாட்டைக்காக்க உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி தெரிவித்த பிரதமர் மோடி, நமது நாட்டு வீரர்களின் வீரத்தைப் பார்த்து அண்டை நாடுகள் பயப்படுவதாக கூறினார்.

அர்ப்பணிப்பு உணர்வு

அர்ப்பணிப்பு உணர்வு

தொடர்ந்து பேசிய அவர், உங்களது அர்ப்பணிப்பு உணர்வு உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது. இந்த ஒட்டுமொத்த நாடும் ராணுவவீரர்களான உங்கள் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளது. உங்களது மனவலிமை உங்களை சுற்றியுள்ள இந்த மலைக் குன்றுகளை விட அதிகமானதாக இருக்கிறது.

வலிமையான நாடு

வலிமையான நாடு

உங்களது வீரம் இந்த மலையின் உயரத்தை விட அதிகமாக இருக்கிறது. உங்களது வீரத்தால் இந்தியத்தாய் பெருமிதம் கொண்டு நிற்கிறாள். நீங்கள் காட்டி வரும் இந்த வீரம் உலக நாடுகள் அனைத்தாலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இந்த நாடு உங்களது கைகளில் பாதுகாப்பாக இருக்கிறது. நீங்கள் பாரத மாதாவின் கவசங்கள். இந்தியா எந்த ஒரு சவாலையும் முறியடித்து வெற்றி பெறும் வலிமை கொண்ட நாடு.

அஞ்சமாட்டோம்

அஞ்சமாட்டோம்

இந்தியா அமைதியை விரும்பும் நாடு. இதை உலகம் பலமுறை பார்த்துள்ளது. அதேநேரம் நமது நிலப்பகுதியை பாதுகாப்பதில் நாம் என்றுமே அஞ்சி பின்வாங்கியது கிடையாது. அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் களத்தில் எதிரிகளை சந்திக்கவும் தயங்கமாட்டோம் என்றும் மோடி கூறியுள்ளார்.

நாடு பிடிக்கும் காலம் மலையேறிவிட்டது

நாடு பிடிக்கும் காலம் மலையேறிவிட்டது

இந்திய ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோசத்தை எதிரிகள் பார்த்துள்ளனர். நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் நாம் ஒருபோதும் அச்சம் கொள்ளப்போவதில்லை நாடு பிடிக்கும் காலம் என்பது மலையேறிச் சென்றுவிட்டது. உங்களால் நாட்டு மக்கள் பெருமையடைகிறார்கள். சுயசார்பு இந்தியா என்பது உங்களால் நிறைவேறும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சுதர்சன சக்கரம் எடுப்போம்

சுதர்சன சக்கரம் எடுப்போம்

புல்லாங்குழல் வாசித்த அதே கைகளில்தான் கிருஷ்ண பரமாத்மா சுதர்சன சக்கரத்தை வைத்திருந்தார். எங்கள் கைகளில் புல்லாங்குழல் இரும் அதே நேரத்தில் தேவைப்படும் போது சுதர்சன சக்கரத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளார் மோடி. அமைதியை விரும்பும் அதே நேரத்தில், நம்மை சீண்டுவோரை நாம் ஒருபோதும் விடமாட்டோம் பாரத் மாதா கி ஜெ,வந்தே மாதரம்

என்று வீரர்கள் மத்தியில் வீர உரையாற்றி தான் எப்போதும் தைரியமான பிரதமர்தான் என்று நிரூபித்துள்ளார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

மேலும் modi செய்திகள்

 • கொரோனா லாக்டவுன் 6.0: மோடியின் இன்றைய பேச்சின் சிறப்பம்சம் என்ன தெரியுமா
 • லாக் டவுனில் மக்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள் – மோடி பெருமிதம்
 • சீனா ஆக்கிரமிப்பு- உண்டு, இல்லை என ஏன் மோடி அரசால் பதில் சொல்ல முடியவில்லை? வெளுக்கும் ப.சி.
 • 5 ஆண்டு- 2264 சீனா ஊடுருவல்கள்.. மோடியிடம் கேள்வி கேட்பீங்களா? நட்டாவுக்கு ப.சி. நச் கேள்வி
 • பிரதமர் மோடியை ஆதரிப்பதில் எந்த தயக்கமும் இல்லை… அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் திட்டவட்டம்
 • எல்லை பிரச்சனை.. அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை.. முக்கிய மீட்டிங்!
 • அவசர நிலை எதிர்ப்பில் தீவிரமாக பங்கேற்றவர் கே.என். லட்சுமணன்- மோடி புகழஞ்சலி
 • அமித்ஷாவின் உள்துறையின் சாதனை பட்டியலில் ஆர்டிகல் 370.. கொரோனா தடுப்பு.. 'இடம் பெறாத சிஏஏ'
 • ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்
 • இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதீர்… பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!
 • சம்பளம் போடக்கூட கைல காசு இல்ல.. மோடிஜி உடனே நிதி கொடுங்க.. நாராயணசாமி வலியுறுத்தல்
 • பிரதமர் பேசும்போது Y2K பத்தி சொன்னாரே கவனித்தீரா.. அது என்னன்னு தெரியுமா.. கிட்ட வாங்க சொல்றோம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already subscribed

Your in currently Olaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » புல்லாங்குழல் ஊதினாலும் சுதர்சன சக்கரமும் எங்கள் கையில் இருக்கிறது – மோடி #ModiStrongestPmEver