முக்கிய முன்னேற்றம்.. லடாக் பேச்சுவார்த்தையில் இறங்கி வரும் சீனா.. எல்லையில் நடக்கும் சின்ன மாற்றம்!

செய்திகள் இந்தியா முக்கிய முன்னேற்றம்.. லடாக் பேச்சுவார்த்தையில் இறங்கி வரும் சீனா.. எல்லையில் நடக்கும் சின்ன மாற்றம்! India oi-Shyamsundar I By Shyamsundar I |

லடாக்: இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், முக்கியமான இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

சீனாவின் மாஸ்டர்பிளான்.. உலக நாடுகளை இணைக்கும் "தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்''.. முழு பின்னணி!

இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டைக்கு பின் உறவு மோசமாகிக் கொண்டே வருகிறது. தொடர்ந்து எல்லையில் சீன ராணுவம் படைகளை குவித்து வருகிறது.அங்கு அமைதி திரும்புவதற்கான எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை.

இதுவரை 20க்கும் அதிகமான முறை இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.ஆனால் எந்த பேச்சுவார்த்தையில் சரியான தீர்வு எட்டப்படவில்லை.

இதுதான் சரியான திட்டம்.. சீனாவை முடக்கும் இந்தியாவின் "கிளீன் ஆப்" முடிவு.. அமெரிக்கா அதிரடி ஆதரவு!

என்ன தீர்வு

என்ன தீர்வு

இந்த நிலையில் இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், முக்கியமான இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். நேற்று மாலையில் இருந்து இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

நீண்ட நேரம்

நீண்ட நேரம்

இந்த பேச்சுவார்த்தை 18 மணி நேரத்தை தாண்டி சென்றது. இந்த நிலையில் லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து படைகளை வாபஸ் வாங்க இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கல்வானில் பிரச்சனையாக இருக்கும் மூன்று கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படைகளை வாபஸ் வாங்க இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டது என்கிறார்கள்.

எந்த இடம்

எந்த இடம்

அதன்படி கல்வானில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளை 14, 15, 17 ஆகிய பகுதிகளில் இருந்து இரண்டு தரப்பும் படைகளை திரும்ப பெற ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பகுதிகள் கல்வானில் இருந்து ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகள் வர நீண்டு உள்ளது. இந்த பகுதிகள் இந்தியாவிற்கு கீழ் வரும் இடங்கள் ஆகும். இதில் கட்டுப்பாட்டு பகுதி 14ல் தான் கடந்த மாதம் பெரிய சண்டை வந்து 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

வேறு எங்கு

வேறு எங்கு

இதில் கட்டுப்பாட்டு பகுதி 16ல் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அந்த பகுதி முழுக்க முழுக்க இந்தியாவிற்கு கீழ் வரும் இடம் ஆகும். ஆனால் அதே சமயம் பாங்காங் திசோ பகுதியில் இருந்து படைகளை வாபஸ் வாங்க சீனா மறுத்துவிட்டது என்று கூறுகிறார்கள். அங்கு இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள 4 பகுதிகளில் 2 பகுதிகளை (பிங்கர்கள் 3 மற்றும் 4) ஆகிய பகுதிகளை சீனா உரிமை கொண்டாடுகிறது.

சீனா உரிமை

சீனா உரிமை

அந்த பகுதிகளில் இருந்து சீனா வெளியேற மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டாலும் முழுமையாக இதனால் அமைதி திரும்பாது என்று கூறுகிறார்கள். இந்த பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்து இருப்பதாகவும், முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இந்தியா இது தொடர்பாக இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

மேலும் india china border tension செய்திகள்

 • இதுதான் சரியான திட்டம்.. சீனாவை முடக்கும் இந்தியாவின் "கிளீன் ஆப்" முடிவு.. அமெரிக்கா அதிரடி ஆதரவு!
 • இந்தியாதான் காரணம்.. நேபாளத்திற்கு ஆதரவாக களமிறங்கும் இம்ரான் கான்.. மூன்று நாடுகளின் பகீர் வியூகம்!
 • அடுத்தடுத்து டெலிட் செய்யப்பட்ட போஸ்ட்கள்.. சீனாவின் வெய்போவில் இருந்து வெளியேறும் மோடி.. திருப்பம்!
 • காஷ்மீரில் தாக்குதல்.. தீவிரவாதிகளுடன் சீனா பேச்சு.. குவிக்கப்படும் படைகள்.. புது சவால்!
 • சீனாவில் ராணுவ புரட்சி வெடிக்கும்.. ஜிங்பிங்கை மிரட்டும் மூத்த தலை.. இந்தியாவை சீண்டியதால் சிக்கல்!
 • தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில்.. சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.. கட்கரி
 • மோடி காட்டிய வழி.. சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிரடி தடை.. அமெரிக்கா ஆக்சன்!
 • ஆயுதம் தேவையில்லை.. நிராயுதபாணியாவே வெளுப்பார்கள்.. சீன எல்லையில் இந்தியாவின் கட்டக் பிரிவு வீரர்கள்
 • கடற்படையும் ரெடி.. இந்திய பெருங்கடலில் நவீன போர் கப்பல்கள் முழு அலார்ட்.. அடுத்தடுத்த திருப்பம்!
 • இது வெறும் தொடக்கம்தான்.. சீனாவின் டேட்டா அஸ்திரத்தை நொறுக்கிய இந்தியா.. மோடியின் ஸ்மார்ட் மூவ்!
 • அடுத்தடுத்த வார்னிங்.. டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு திடீர் தடை.. அரசின் முடிவிற்கு என்ன காரணம்?
 • எல்லையில் பதற்றம்.. இந்தியா – சீனா இடையே 3ஆவது கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already subscribed

Your in currently Olaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » முக்கிய முன்னேற்றம்.. லடாக் பேச்சுவார்த்தையில் இறங்கி வரும் சீனா.. எல்லையில் நடக்கும் சின்ன மாற்றம்!

Top Trending Post