லடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்!

செய்திகள் உலகம் லடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்! World oi-Shyamsundar I By Shyamsundar I |

பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லையில் சீனாவின் கடற்படை தீவிரமான போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த செயல் காரணமாக தென்சீன கடல் எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

சீனாவின் மாஸ்டர்பிளான்.. உலக நாடுகளை இணைக்கும் "தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்''.. முழு பின்னணி!

லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையே கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. அதிலும் கல்வான், பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங்ஸ், டெப்சாங் ஆகிய பகுதிகளில் சீனாவின் ராணுவம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

அங்கு படைகளை குவித்து சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுடன் மட்டும் சீனா இப்படி மோதலை கடைபிடிக்கவில்லை. இன்னொரு பக்கம் வேறு சில நாடுகள் உடனும் எல்லையில் சீனா மோதலை கடைபிடித்து வருகிறது.

ஆபரேஷன் அந்தமான்.. இந்தியாவிடம் ஜப்பான் சொன்ன "அந்த" திட்டம்.. இந்திய பெருங்கடலில் சீனாவிற்கு செக்!

தென் சீன கடல் எல்லை

தென் சீன கடல் எல்லை

அதன்படி சீனா தற்போது தென் சீன கடல் எல்லையில் அண்டை நாடுகளுடன் மோதி வருகிறது. தென் சீன கடல் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகள் மீது சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. சீனாவின் இந்த செயல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. தென் சீனாவின் அருகே இருக்கும் கடல் பகுதியை மலேசியா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடுகிறது.

சீனாவின் கவனத்திற்கு காரணம்

சீனாவின் கவனத்திற்கு காரணம்

இங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய் வளம்தான் இதற்கு காரணம்.ஏற்கனவே இங்கு மலேசியாவும் எண்ணெய் எடுக்கிறது. சீனாவும் எண்ணெய் எடுக்கிறது. இந்த கடல் பகுதியை மொத்தமாக கட்டுப்படுத்த சீனா முயன்று கொண்டு இருக்கிறது. அதாவது மலேசியாவின் எண்ணெய் கிணறுகளை கட்டுப்படுத்த சீனா முயன்று கொண்டு இருக்கிறது. இதுதான் அங்கு சண்டைக்கு காரணம்.

அமெரிக்கா

அமெரிக்கா

இதில் எப்போதோ அமெரிக்கா உள்ளே நுழைந்து விட்டது. ஆமாம் ஒரு இடத்தில் எண்ணெய் இருந்தால் அங்கு அமெரிக்கா தலையிடாமல் இருக்குமா ?!. தென் சீன கடல் எல்லையில் சீனாவின் செயலுக்கு தடையாக அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு உதவி செய்தது. அங்கு அமெரிக்கா சீனாவிற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. முக்கியமாக அமெரிக்கா சீனாவிற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வியாட்நாம், மலேசியாவிற்கு ஆதரவு அளித்து வருகிறது.

படைகள்

படைகள்

அங்கே அமெரிக்கா கடற்படையை அனுப்பி உள்ளது. அமெரிக்காவின் மூன்று போர் கப்பல்கள் அங்கே இருக்கிறது. அதேபோல் இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவிற்கு ஆதரவாக அங்கே இரண்டு போர் கப்பல்களை அனுப்பி உள்ளது. இந்த நிலையில்தான் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தென் சீன கடல் எல்லையில் சீனாவின் கடற்படை தீவிரமான போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த செயல் காரணமாக தென்சீன கடல் எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

ஐந்து நாள் பயிற்சி

ஐந்து நாள் பயிற்சி

மொத்தமாக ஐந்து நாட்கள் கடற்படை போர் பயிற்சியை சீனா அங்கே செய்ய உள்ளது. அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை நடுங்க வைக்கும் வகையில் சீனா தீவிரமாக போர் ஒத்திகையை செய்து வருகிறது. தனது நவீன போர் கப்பல்களை வைத்து அங்கு தீவிரமாக சீனா போர் பயிற்சிகளை செய்து வருகிறது. அதிலும் வியட்நாம் பகுதியில் எல்லை மீறி சீனா பயிற்சிகளை செய்து வருகிறது.

புகார் என்ன

புகார் என்ன

ஏற்கனவே ஏசியன் (ASEAN) குழுவில் இருக்கும் நாடுகளிடம் சீனாவிற்கு எதிராக வியட்நாம் புகார் அளித்துள்ளது. ஆசியா நாடுகள் இடையே சீனா பதற்றத்தை ஏற்படுத்துவதாக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஏசியன் குழுவில் புகார் அளித்துள்ளது. ஏசியன் (ASEAN) என்பது இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, மியான்மர், புருனோய், லாவோஸ் ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

மேலும் japan செய்திகள்

 • ஆபரேஷன் அந்தமான்.. இந்தியாவிடம் ஜப்பான் சொன்ன "அந்த" திட்டம்.. இந்திய பெருங்கடலில் சீனாவிற்கு செக்!
 • ஒன்று சேரும் 10+ வல்லரசுகள்.. சீனாவிற்கு எதிராக நாடுகளை திரட்ட திட்டம்.. ஜப்பானின் மாஸ்டர் பிளான்!
 • அமெரிக்காவை அடுத்து "சீனுக்குள்" வந்த ஜப்பான்.. இந்தியாவோடு சீக்ரெட் போர் பயிற்சி.. கலக்கத்தில் சீனா
 • ஜப்பான் மீது பறந்தது வேற்று கிரக வாகனமா? வெள்ளை உருவத்தில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு
 • லாக்டவுன் தளர்வு- மிகமோசமான 2-வது கொரோனா பாதிப்பு அலை இந்தியாவை தாக்கும்- ஜப்பான் ஆய்வு மையம்
 • ஜப்பானில் மே இறுதிவரை அவசரநிலை நீட்டிப்பு.. கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் பிரதமர் அறிவிப்பு
 • காய்கறி வாங்கணும்னா ஆம்பளைங்க போங்கப்பா.. பெண்கள் போனா வர ரொம்ப நேரமாகுது.. வாங்கி கட்டி கொண்ட மேயர்
 • பாலியல் தொழிலாளிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ஜப்பான்.. போதவில்லை என பெண்கள் வேதனை
 • ஜப்பானில் 9.3 நிலநடுக்கம்.. சுனாமியால் 90 அடி வரை உயரும் கடல் அலை.. ஆய்வில் பரபரப்பு தகவல்
 • ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு
 • பட்டதெல்லாம் போதும்ப்பா.. சீனாவின் அடிமடியில் கை வைத்த ஜப்பான்.. அதிர்ச்சி வைத்தியம்
 • சில நொடிகள், 1 லட்சம் துளிகள்.. கொரோனா வேகமாக பரவும் ரகசியம் இதுதான்.. ஜப்பான் விஞ்ஞானிகள் அதிரடி!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already subscribed

Your in currently Olaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » லடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்!

Top Trending Post