
செய்திகள் இந்தியா 300 முறை போலீசை சுட்ட ரவுடி விகாஷ் துபேவின் ஆட்கள்.. வீட்டின் பதுங்கு குழியில் ஏராளமான ஆயுதங்கள் India oi-Velmurugan P By Velmurugan P |
கான்பூர்: டிஎஸ்பி, 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 8 போலீசாரை சுட்டுக்கொன்ற பிரபல தாதா விகாஷ் துபேவின் இல்லத்தில் பதுங்கு குழி இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் பிரபல தாதா விகாஷ் துபே. இவரை மீது கொலை, கொலை முயற்சி, உள்பட 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளது.

விகாஸ் துபேபை உத்தரப்பிரதேச போலீசார் நீண்ட காலமாக தேடிவந்தனர். தலைமறைவாக வாழ்ந்து வரும் இவன் கான்பூரின் துபே கிராமத்தில பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வியாழக்கிழமை இரவு டிஸ்பி தலைமையில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 12க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு விரைந்தனர்.
அப்போது போலீஸ் வருதை முன்கூட்டியஅறிந்திருந்த விகாஷ் துபே மற்றும் அவனது ஆட்கள் மொட்டை மாடியில் ஏறி நின்று கொண்டனர். ஜேசிபிஐ நடுவழியில் நிறுத்தி அவர்களை மடக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் டிஎஸ்பி, 2 சப்இன்ஸ்பெக்டர்கள் உள்பட 8 காவலர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 4 காவலர்கள் காயம் அடைந்தனர்.
மாவோயிஸ்ட்டுகள் பாணியில் கான்பூர் போலீசார் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த விகாஸ் துபே கேங்
இந்த சம்பவத்திற்கு தாதா விகாஷ் துபே மற்றும் அவனது ஆட்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த ரவுடி கூட்டத்தை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே கான்பூரின் பித்தூர் பகுதியில் உள்ள ரவுடி விகாஷ் துபேவின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கு பதுங்கு குழிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் வீட்டில் இருப்பதையும் கான்பூர் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என்று கான்பூர் ஐ.ஜி. மோஹித் அகர்வால் பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
காவல்துறையினரை 200-300 முறை குற்றவாளிகள் சுட்டிருக்கிறார்கள். அவற்றின் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளது. விகாஸ் துபே மற்றும் அவரது உதவியாளர்களால் ஐந்து போலீசாரின் ஆயுதங்களும் சூறையாடப்பட்டுள்ளன. ஏ.கே .47, இன்சாஸ் துப்பாக்கி மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகளை போலீசாரிடம் பறித்துள்ளனர். இதில் ஒரு துபாக்கியை இதுவரை மட்டும் மீட்டுள்ளனர்.இதனடையே விகாஷ் துபேவின் வீட்டை ஜேசிபியை வைத்து இடித்து தரைமட்டம் ஆக்கினர். இந்த ஜேசிபியை வைத்து தான் போலீஸை மடக்கியிருந்தான் விகாஷ் துபே. அதே ஜேசிபியால் வீடு அழிக்கப்பட்டது. அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!
மேலும் kanpur செய்திகள்
-
மாவோயிஸ்ட்டுகள் பாணியில் கான்பூர் போலீசார் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த விகாஸ் துபே கேங்
-
உத்தரப்பிரதேசத்தை கலங்க வைத்த விகாஸ் துபே யார்.. பின்னணி என்ன?
-
ஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது மாடியில் இருந்து குதித்த நாய் தற்கொலை
-
சினிமா பாணியில் சுற்றி வளைத்த ரவுடிகள், டிஎஸ்பி உள்பட 8 போலீஸ்காரர்களை கொன்றது எப்படி?
-
பயங்கர ரவுடி விகாஷ் துபேவை பிடிக்க போன போது விபரீதம்.. 8 போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற கிரிமினல்கள்
-
நான் இந்திரா காந்தியின் பேத்தி.. உண்மையை மக்களிடம் சொல்வேன்… உ.பி. அரசுக்கு பிரியங்கா எச்சரிக்கை
-
தானம் தர போன இடத்தில்.. பிச்சைக்கார பெண்ணுடன் காதல்.. அப்படியே கல்யாணத்தையும் முடித்த இளைஞர்!
-
தங்கச்சின்னு கூட பார்க்கல.. எப்ப பார்த்தாலும் "அதுவே" குறியா இருந்தான்.. மகன் மீது தாய் பகீர் புகார்
-
அடுத்த ஷாக்.. மகளை சீரழித்த கும்பல்.. புகாரளித்த தாய்.. பூட்ஸ் காலால் மிதித்து.. கொடூர கொலை.. வீடியோ
-
கங்கை கரையில் மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டு இடிக்கப்படுகிறது.. ஏன் தெரியுமா?
-
கங்கையை பார்வையிட சென்ற மோடி.. வேகமாக படிகளில் ஏறியபோது.. தடுமாறி விழுந்தார்… பரபரப்பு!
-
பக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already subscribed