1564 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஊதிய கொடுப்பாணை ( Pay Authorization ) வெளியீடு.

தமிழகத்தில் உள்ள அரசு / நகராட்சி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வித் திட்டம் செயல்படுத்தும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட 1880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு அரசாணையின்படி 1564 பணியிடங்களுக்கு 01.01.2019 முதல் 31.12.2019 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து 1564 பணியிடங்களுக்கு 01.01.2020 முதல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கோரியிருந்தார். அக்கருத்துரு மீது அரசின் கடிதத்தில் சில கூடுதல் விவரங்கள் கோரப்பட்டு , அப்பணியிடங்களின் சார்பான விவரங்களை சம்மந்தப்பட்ட அலுவலரிடம் தொகுத்து பெற்று வழங்க கால தாமதம் ஆகும். எனவே , 01.01.2020 முதல் 31.03.2020 வரை 3 மாதங்களுக்கு துறைத் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் 1564 பணியிடங்களுக்கு தொடர்ந்து ஊதியம் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Screenshot_20200427_202835

Your in currently Olaa.in » TNPSC Exam Pattern, Syllabus, Free Study Materials Previous Question, Answer Online Test » 1564 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஊதிய கொடுப்பாணை ( Pay Authorization ) வெளியீடு.